ஸ்ரீ மயூரபதி முருகன் ஆலயம் பேர்லின்

கட்டடக்கலை வரலாறு

மெய்யடியார்களே!

எல்லாம் வல்ல நமது ஸ்ரீ மயூரபதியினுடைய திருவருளினாலே இந்துமகாசபையினரும் பேர்லின் வாழ் மக்களும் ஏனைய ஆன்மீகத் தொண்டர்களும் எம் பெருமான் ஸ்ரீ மயூரபதிமுருகப்பெருமானுக்கு ஆகமவிதிப்படி ஆலயம் ஒன்று அமைக்க எண்ணி கடந்த 30.05.2008ல் Berlin Neukölln Riesestr.20-22//Ecke Blaschkoallee என்னும் முகவரியில் காலத்தால் கரையாத சொத்தாக எம்பெருமானுக்கு காணிநிலம் ஒன்று வேண்டி அந்தணப் பெருந்தகைகள்; அடியார்கள் புடைசூழ 22.06.2008 அன்று பூமி பூஜைசெய்யப்பட்டு பேர்லின் நொய்க்கொல்ன் (Neukölln) நகரபிதா உள்ளடங்கலாக பலநூறு மக்கள் கலந்துகொண்டு 04.04.2009 அன்று அடிக்கல்லினை நாட்டி ஆலயக் கட்டிடத் திருப்பணி ஆரம்பிக்கப்பட்டது.

புலம்பெயர் மண்ணில் காலமாற்றங்கள் ஏற்படும் நிலையிலும் பல தடைகளையும் தாண்டி எம்பெருமான் திருவுளத்தால் முருகனின் புதிய ஆலயம் கோபுரத்துடன் கூடிய சிற்ப வேலைப்பாடுகளுடன் சகல சன்னிதானங்களும் அமையப்பெற்று வானளாவ உயர்ந்து நிற்கின்றதும் அவன் திருவருளே.
ஆலயத்தின் கட்டுமான வேலைகள் யாவும் ஜேர்மன் கட்டிட நிர்மாணிப்பாளர் மேற்பார்வையில் ஜேர்மன் கட்டிட அமைப்பாளர் கொண்டு அமையப் பெற்றுள்ளது.
சன்னிதானங்கள், கோபுரங்கள், கதவுகள் யாவும் மகாபலிபுரத்து சரித்திரப் பிரசித்திபெற்ற சிற்பக் கலைஞர்களால் பாரத -தேசத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

எமது ஆலயத்தின் திருப்பணி வேலைகள் யாவும் பூத்தியாகி 8.09.2013 கும்பாபிஷேகம் / குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.

* * * * * * * * * மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம் * * * * * * * * * * *.

German English

Powered By Indic IME