ஸ்ரீ மயூரபதி முருகன் ஆலயம் பேர்லின்

தலவரலாறு

மெய்யடியார்களே!

பூமிப்பந்தின் வடபால் செல்வச்செழிப்பால் சிறப்புற்று விளங்கும் ஐரோப்பாக் கண்டத்தின் பொக்கிஷமாம் ஜேர்மன் தலைநகர் பேர்லினில் நாடிவருவோரைக் காத்து நற்கருணை புரிந்து வேண்டும் வரமளித்து வினைதீர்த்து அருள்பாலிக்கும் ஸ்ரீ மயூரபதிமுருகன் ஆலயம் 1991ம் ஆண்டு இலங்கைத்தமிழர் ஒன்பதுபேரால் ஆரம்பிக்கப்பட்டு அந்தணப் பெருந்தகை சிவ ஸ்ரீ பரமேஸ்வரக்குருக்கள் அவர்களால் குடமுழுக்குச் செய்யப்பட்டது.

நாளடைவில் அந்த நிர்வாகிகள் சிலரது முயற்சியாலும்> பொதுமக்களின் பங்களிப்பாலும் இவ்வாலயம் அமைந்துள்ள நிலவறை கொள்வனவு செய்யப்பட்டு பொது உடைமை ஆக்கப்பட்டது இதன்படி 200 பேர் அங்கம் வகிக்கும் பொதுச்சபை அமைக்கப்பட்டு பொதுச்சபையில் இருந்து தொpவு செய்யப்பட்ட 11 பேர் கொண்ட நிர்வாகசபை இந்த நாட்டுச்சட்டதிட்டங்களுக்கு அமைய இந்து மகாசபை e.V. என்ற பெயரில் இயங்கி வருகிறது.

இச்சபையின் சிறப்பம்சமாக எங்குமே இல்லாதபடி சாட்சாத் ஸ்ரீ மயூரபதி முருகப்பெருமானே என்றுமே மாறாத தலைவராக அமர்ந்திருக்க மற்றய 11 பேரும் தொண்டர்களாக இருந்து சேவையாற்றி வருகின்றார்கள்.

இந்த நிர்வாக சபையின் செயற்பாடுகளை கவனிப்பதற்கென 5 பேர் கொண்ட போசகர் குழுவும் இயங்கி வருகிறது.
இதில் போசகர் குழு 4 வருடத்திற்கு ஒரு முறையும் நிர்வாகசபை இரண்டு வருடத்திற்கு ஒருமுறையும் மாற்றி அமைக்கப்படுகிறது.
இவ்வாலயத்தின் மற்றொரு சிறப்பு அம்சமாக ஐரோப்பாவிலேயே முதன் முதலாக காலம் தவறாமல் நித்தமும் 6 காலப் பூஜையும் நடந்து வருகிறது.

மற்றும் நித்திய செவ்வாய்க் கிழமைகளில் நமது தாய்நாடாம் இலங்கையிலும்> நாம் வாழும் இந்த பூமி எங்கும் அமைதியும் சுபீட்சமும் நிலவ வேண்டியும் நித்திய வெள்ளிக்கிழமைகளில் தன் தன் சொந்த நலனுக்கும், தத் தமது குடும்ப நலனைக் கருதியும் தியான வழிபாடு நடைபெறுகின்றது.

இவ்வாலயத்தின் உற்சவ தினங்களாக நமது தாய்நாட்டில் ஈழநல்லூர்ப் பதியின் உற்சவ தினங்களின்படி ஆவணி மாதத்தில் நடைபெறும் உற்சவகாலம் அனுஷ்டிக்கப் பெற்று விசேட பூஜைகள் நடைபெற்று 24 ம் நாளின் அன்று எம்பெருமான் ஸ்ரீ மயூரபதிப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதரராக அதற்கென அமைக்கப்பட்ட தேரில் வெளிவீதி உலாவந்து அருள் பொழியும் சிறப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

இச்சிறப்புகளுக்கெல்லாம் சிறப்பான இத்தொண்டினைச் செய்யும் பிரதமகுரு உதவிக்குரு ஆகிய இருவரும் ஆரம்பகாலங்களில் இலங்கையிலிருந்தும் தற்பொழுது எமது அயல் நாடாம் இந்தியாவிலிருந்தும் வரவழைக்கப்பட்டு இங்கு சேவையில் இணைக்கப்பட்டு நித்திய நைமித்தியங்கள் தவறாது நடைபெற்று வருகின்றது.

மேலும் இந்துமகாசபையினரும் பேர்லின் வாழ் மக்களும் ஏனைய ஆன்மீகத் தொண்டர்களும் எம் பெருமான் ஸ்ரீ மயூரபதிமுருகப்பெருமானுக்கு ஆகமவிதிப்படி ஆலயம் ஒன்று அமைக்க எண்ணி கடந்த 30.05.2008ல் Berlin Neukölln Riesestr.20-22//Ecke Blaschkoallee என்னும் முகவரியில் காலத்தால் கரையாத சொத்தாக எம்பெருமானுக்கு காணிநிலம் ஒன்று வேண்டி> அந்தணப் பெருந்தகைகள் அடியார்கள் புடைசூழ 22.06.2008 அன்று பூமி பூஜைசெய்யப்பட்டு, பேர்லின் நொய்க்கொல்ன் (Neukölln) நகரபிதா உள்ளடங்கலாக பலநுhறு மக்கள் கலந்துகொண்டு 04.04.2009 அன்று அடிக்கல்லினை நாட்டி ஆலயக் கட்டிடத் திருப்பணி ஆரம்பிக்கப்பட்டது.

புலம்பெயர் மண்ணில் காலமாற்றங்கள் ஏற்படும் நிலையிலும் பல தடைகளையும் தாண்டி> எம்பெருமான் திருவுளத்தால் முருகனின் புதிய ஆலயம் கோபுரத்துடன் கூடிய சிற்ப வேலைப்பாடுகளுடன் சகல சன்னிதானங்களும் அமையப்பெற்று வானளாவ உயர்ந்து நிற்கின்றதும் அவன் திருவருளே.

ஆலயத்தின் கட்டுமான வேலைகள் யாவும் ஜேர்மன் கட்டிட நிர்மாணிப்பாளர் மேற்பார்வையில் ஜேர்மன் கட்டிட அமைப்பாளர் கொண்டு அமையப் பெற்றுள்ளது.

சன்னிதானங்கள், கோபுரங்கள், கதவுகள் யாவும் மகாபலிபுரத்து சரித்திரப் பிரசித்திபெற்ற சிற்பக் கலைஞர்களால் பாரத -தேசத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

மேலும் எம்பெருமான் ஆலயம் இடைவிடாது தினம் தினம் பல இன மக்களாலும் ஆர்வத்துடன் பார்வையிடப்படுகிறது. இந்து மதத்தவரால் பய பக்தியுடன் வழிபடப்படுகிறது. எதிர்வரும் காலத்தில் பல திருப்பணிவேலைகளை எதிர் நோக்கி நிற்கின்றது.
குறிப்பாக அடியார்கள் மாதாந்தம் நன்கொடையாக ஆகக்குறைந்தது பத்து ஈரோக்கள் தங்கள் வங்கிக்கணக்கில் இருந்து ஆலயத்தின் கீழ்க்காணும் வங்கிக் கணக்கிற்கு அனுப்புகின்றார்கள். இந் நன்கொடையானது மிகப்பாரிய உதவியைச் செய்வதுடன் ஆலயத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

* * * * * * * * * * மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம் * * * * * * * * * * * *

German English

Powered By Indic IME